கேளிக்கை

26 வருடங்களை பூர்த்தி செய்த அஜித் விவேக் ஓபராய் வாழ்த்து

நடிகர் அஜித்துக்கு பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வா இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 1993 – ம் ஆண்டு ஜுன் மாதம் 4 – ம் தேதி வெளியானபடம் அமராவதி. இந்த படத்தில் நடிப்பதற்காக 1992 – ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 – ம் தேதி நடிகர் அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தவகையில நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி நேற்றுடன் 26 ஆண்டுகளாகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் இந்த 26 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது டுவீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “என்னுடைய நண்பனும் மிகப் பெரிய ஆளுமையுமான அஜித் 26 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார். நண்பா உனக்கு என்னுடைய அன்பு. பிரமிக்க வைக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவாய் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

0 Replies to “26 வருடங்களை பூர்த்தி செய்த அஜித் விவேக் ஓபராய் வாழ்த்து

  1. Pingback: buy cialis japan

Leave a Reply