பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 2.15 லட்சம் ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள காலாஜி கோராஜி பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று அமைத்துள்ளது. இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் ஏராளமானோர் ரூபாய் நோட்டுகள் மட்டும் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
இதில் 265-ம் எண் கொண்ட பாதுகாப்பு பெட்டகத்தில் சுனிதா மேத்தா என்பவர் 2.15 லட்சம் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை வைத்துள்ளார். அவருக்கு சமீபத்தில் பணத்தேவை ஏற்பட்டதால் லாக்கரில் உள்ள பணத்தை எடுக்கலாம் என வங்கிக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று ஊழியர்களிடம் கூறிவிட்டு தனது பாதுகாப்பு பெட்டகத்தை திறந்துள்ளார். திறந்த அவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்ததுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தின் உள்ளே இருந்த பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கரையான்கள் அரித்திருந்துள்ளது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்னரே வங்கி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு பெட்டகத்தை வைத்துள்ள பிறருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்களின் வங்கிக்குவந்து பார்த்தபோது அவர்களில் சிலரின் உடமைகளும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஏற்பட்ட நிலையில், அனைவருக்கும் இதற்கான நஷ்டஈடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.