அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு ஆண்டு குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை துவக்கினர். தொடர் போராட்டத்தின் 100வது நாளில் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர்.
இதையடுத்து தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.
[su_carousel source=”media: 13989,13987″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”3″ speed=”0″]
இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒரு சிலர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த துப்பாக்கி சூட்டின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று.
சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க : இரவு நேர ஊரடங்கை கடுமைப்படுத்தி நோய் பரவலை தடுக்க மத்திய அரசு உத்தரவு