மத்திய பிரதேச மாநிலம், அசோக் நகரில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்மிருதி இரானி, பொதுக்கூட்டத்தில் காங்கிரசை விமர்சனம் செய்தார்.
அப்போது சட்டப்பேரவை தேர்தலின்போது விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதை செய்ததா? என அவேசமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள், `ஆமாம், எங்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என உரக்க முழக்கமிட்டனர். இதனால், ஸ்மிருதி மட்டும் இல்லாமல் மொத்த பாஜக மற்றும் இந்துத்வா அதரவளார்கள் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இது தொடர்பான வீடியோவை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இது பொதுமக்களிடம் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஸ்மிருதி இரானியை டிவிட்டர்வாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது போதாது என்று உத்தர பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அந்த சிறுவர்கள் பிரதமர் மோடியை `திருடன்’ என கூறியதை கேட்டு பிரியங்கா வாயடைத்து நின்றார். மேலும், இதுபோல் பேசக் கூடாது என அவர்களுக்கு பிரியங்கா அறிவுறுத்தினார்.
ஆனால் இது தொடர்பான எடிட் செய்யப்பட்ட வீடியோவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டு பிரியங்காவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஆனால், நான் அப்படி பேசவில்லை என பிரியங்கா மறுத்ததுடன், இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என தெரிவித்தார். எடிட் செய்யப்படாத வீடியோ இங்கே காணலாம் இதனால், ஸ்மிருதி இரானி மேலும் அவமானம் அடைந்து உள்ளதாக தகவல் லீக் ஆகியுள்ளது.