10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (2.3.2022) வெளியிட்டார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதுஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 முதல் 31 ஆம் தேதி வரையும்,

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல் செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த பாடங்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது என்பது குறித்த அட்டவணை வெளியாகியிருக்கிறது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுதேர்வு அட்டவணை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.