வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2 கோடி கையெழுத்து பெறப்பட்ட மனுவை, ராகுல்காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி மற்றும் எல்லையில் முகாமிட்டு கடும் குளிரிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று 29வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 2 கோடி பேரிடம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த கையெழுத்து படிவங்கள் மற்றும் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரும் கடிதத்தையும் நேரடியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கொடுக்க, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேரணியாக சென்றனர்.
[su_image_carousel source=”media: 20585,20586″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]
அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கொரோனா பாதிப்பின் காரணமாக டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை மீறி பேரணி நடத்தியதாக காந்தி உள்பட அனைவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின்னர், ராகுல்காந்தி, குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் ராஸ்டிரபதி பவன் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, “இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும், இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருவதையும் சுட்டிக்காட்டியதாக கூறினார்.
இந்தியாவில் ஜனநாயகம் ஆட்சியாளர்களின் கற்பனையில் மட்டுமே இருக்கலாம், ஆனால் உண்மையில் இல்லை” என்றும் கடுமையாக சாடினார்.
நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை- பினராயி விஜயன்