வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு, 3 மாதங்களுக்குள் புதுப்பித்துக்கொள்ள சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணைப்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வாயிலாக மே 28 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2019 வரை வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க, இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதார்கள் அரசாணை வெளியிட்ட நாள் முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது 27.8.2021க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாகப் புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி 27.8.2021 வரை தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடி எழுத்துத் தேர்வு மூலம் பருவத் தேர்வுகள் நடத்தப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்