தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், சமையலர், உதவியாளர், உளவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
1. பாதுகாவலர் (Guard) – 12
சம்பளம் : ரூ.12,000
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 33 வயது இருக்க வேண்டும்.
2. சமையலர் (Cook)- 02
சம்பளம் : ரூ.10,000
கல்வித் தகுதி : 8 ஆம் தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 33 வயது இருக்க வேண்டும்.
3. காவலர் (Watchman)- 02
சம்பளம் : ரூ.10,000
தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. உடனாள் (Helper)- 01
சம்பளம் : ரூ.8,000
தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
5. உடற்கல்வி ஆசிரியர் (Physical Education Teacher)- 01
சம்பளம் : ரூ.15,000
கல்வித் தகுதி : உயர்நிலை உடற்கல்வி ஆசிரியர் சான்று பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 35 வயது இருக்க வேண்டும்.
6. உளவியலாளர் (Psychologist/Counsellor)- 01
சம்பளம் : ரூ.15,000
கல்வித் தகுதி : உளவியல் பாடப் பிரிவில் இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 35 வயது இருக்க வேண்டும்.
7. தொழிற்பயிற்றாசிரியர் (வாத்தியம்) (Vocational Instructor -Band Master)- 01
சம்பளம் : ரூ.15,000
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, இசைக்குழுவினர் பயன்படுத்தும் இசை மொழியினை அறிந்திருத்தல் வேண்டும். ஏதேனும் ஒரு வாத்தியக் கருவி வாசிப்பதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 35 வயது இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150, ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 செலுத்தி இருப்பவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2019 @ 5.30 pm
விண்ணப்பிக்கும் முறை: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லம் (Government Place of Safety, Vellore) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றிதல்களுடன்- “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் மாவட்டம்- 632001” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.