வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐந்து ஒருநாள் போட்டியில் உள்ள தொடரை இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி டைய்யில் முடிந்தது. 3-வது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், அணியில் கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர். சாஹல், ரிஷப் பந்த் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மகராஷ்ரா மாநிலம் மும்பையில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – தவான் ஆகியோர் களமிறங்கினர். தவான் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால் விராட் கோலி 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.
2015 உலகக்கோப்பையில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்தினார் சங்கக்காரா. அதுவும் தனது கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில் நான்கில் சதம் அடித்து மிகக் கெளரவமாக ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்து உலக சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி எதிர்பாராதவிதமாக 16 ரன்களில் ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் உலக சாதனை நிகழ்த்தும் வாய்ப்பை இழந்தார் கோலி. இந்தமுறையும் கோலியின் சதத்தையும் உலக சாதனையையும் எதிர்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.
பின்னர் ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இதனையடுத்து ரோகித் சர்மா 60 பந்தில் 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் 98 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் தனது 21-வது சதத்தை ரோகித் சர்மா பூர்த்தி செய்தார்.
பின்பு ரோகித் சர்மா 137 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து அம்பதி ராயுடு உடன் மகேந்திரசிங் டோனி ஜோடி சேர்ந்தார்.
அம்பதி ராயுடு 80 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி அவர் அடுத்த பந்தில் ரன்அவுட் ஆனார். டோனி 15 பந்தில் 2 பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்து ஆட்மிழந்தார். 6-விக்கெட்டுக்கு கேதர் ஜாதவ் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவ் 7 பந்தில் 16 ரன்களும், ஜடேஜா 4 பந்தில் 7 ரன்களும் அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.
இதனையடுத்து 378 ரன்கள் வெற்றி இலக்குடன் தொடக்க வீரர்களாக ஹெம்ராஜ்- கியெரன் பொவேல் களமிறங்கனர். ஹெம்ராஜ் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 2 பந்துகளில் ஆட்டமிழந்தார். கியெரன் பொவேல் 12 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து அடுத்த அடுத்த விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டிஸ் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டிஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் நிலவரம்
IND 377/5 (50.0 Ovs)
WI 153-all out (36.2 Ovs)
இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிறந்த விளையாட்டு வீரை : ரோஹித்