#MeToo விவகாரம் குறித்து சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலர் டிவிட்டரில் புகார் அளித்து வருகிறார்கள். ஊடகத்தாலும் #MeToo விவகாரம் முக்கிய செய்தியாக பேசப்பட்டது. ஆனால் ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி ராஜலட்சுமி #JusticeForRajalakshmi தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து பலரும் வாய் திறக்கவில்லை.
#MeToo என்றால் ஊருக்கு முந்தி வந்து பேசும் பிரபலங்கள் ராஜலட்சுமி பற்றி மட்டும் பேசாதது ஏன் என்று சமூக வளைத்தலங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராஜலட்சுமிக்கு நிகழ்ந்த அநியாயம் குறித்து குஷ்பு வெளியிட்ட டிவிட்டில், “சாதி, சமூகத்தின் அடிப்படையில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை செய்ய யார் அவர்களை ஊக்குவிக்கிறார்கள்., அவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை இதை அனுமதிக்கிறதா..” என்று கேள்வி எழுப்பியுள்ளார். #JusticeForRajalakshmi
இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த், “13 வயது ராஜலட்சுமி தனது தாயின் கண் முன்பு, தான் நிராகரித்தவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதால் நடக்கும் கொடூரங்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். #JusticeForRajalakshmi
ராஜலட்சுமியின் விவகாரம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள நடிகர் அசோக் செல்வன் “இது வருத்தத்திற்குரியது. நீதி கடுமையாக இருக்க வேண்டும். மீடியாக்கள் இது குறித்து குரல் கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JusticeForRajalakshmi
#MeToo பற்றி பேசிய சின்மயிடம், ராஜலட்சுமிக்கு நியாயம் கேட்க மாட்டீர்களா என்றும், ராஜலட்சுமி குறித்து அமைதியாக இருப்பது பற்றியும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.