தமிழ், மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகியுள்ள “வீரமாதேவி” படத்தில் சன்னி லியோன் நடித்து வருகின்றார். இதற்கு கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி நடித்தால் படம் வெளியிட விடமாட்டோம் என கூறியுள்ளனர்.
விசி வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் ‘வீரமாதேவி’ என்ற படம் உருவாகி வருகின்றது.
காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என போராடம் நடத்திய கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர், வீரமாதேவி பட விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்திற்கு என்று சில வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இதை குறைக்கும் வகையில் இப்படத்தில் சன்னி லியோன் நடிப்பது இருப்பதாக கூறி அந்த அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீரமாதேவி படம் அக்டோபர் முதல் வாரம் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.