விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 5 நாள் வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.
அதன்படி கோவில் நிர்வாகங்கள், வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் கரைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.
ஆனாலும் சில பகுதிகள் வழியே ஊர்வலம் செல்வதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து ஐஸ் அவுஸ் நோக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களில் 40 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இயற்க்கைக்கு ஒவ்வாத பொருட்களை கொண்டு மிக பெரிய அளவில் செய்து வந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெயண்ட் சைஸ் சிலைகள் கடலில் கரைப்பதால் அவ்வகை விநாயகர் சிலைகள் கரைப்படாமல் சுற்றுபுறசூழல் சேதமைடைந்து வருவதால் இதை கண்ணுற்ற சமூக ஆர்வலர்கள் மட்டும் இன்றி ஆன்மிகவாதிகளும் வேதனை அடைவதாக தெரிவித்தனர்