என்னுடன் விவாதத்திற்கு தயாரா.. ஒரு பெண்ணின் தாயாக கேட்கிறேன் என அமலா பாலின் ஆடை படம் குறித்து அமாலா பாலை தாக்கி பேசியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்கு ஆடை படம் குறித்த விவாதத்துக்கு தானும் அமலா பாலும் தயார் என மிரளவிட்ட அப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார்.
மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடிப்பில் உருவான படம் ஆடை. பல தடைகளை மீறி இப்படம் வெள்ளிக்கிழமை இரவு வெளியாகி வெற்றி பெற்றது. நடிகை அமலா பால் படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பதால் படம் ரிலீஸாவதற்கு முன்பு பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் படம் வெளியான பின்பு அமலா பாலின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆடை படம் குறித்து நடிகையும் இயக்குனருமாஞான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் டிவிட்டரில் அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடை படம் குறித்து ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
உங்களிடமும் படத்தின் இயக்குனரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது எனவும், ஆனால் அவை ஒரு நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ அல்ல, சாதாரண பார்வையாளர்களாகவும், ஒரு பெண்ணாகவும், பெண் குழந்தைகளின் தாயாகவும் தான் என்று கூறியிருந்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதில் அளித்துள்ளர். அதில், உங்களது பாராட்டுக்கு நன்றி. நான் எப்போதும் விவாதத்துக்கு தயார். அமலாபாலும் விவாதத்துக்கு தயாராக உள்ளார். நீங்கள் விரும்பினால் அதை வீடியோவாக நாங்கள் பதிவு செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.
ரத்னகுமாரின் இந்த பதிலுக்கும் அவரது கேள்விக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இதுவரை பதிலளிக்கவில்லை. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.