சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் உருவான கனா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவரது இரண்டாவது தயாரிப்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரியோராஜ், கலையரசன், விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கார்த்திக் வேணுகோபால் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‘என் அண்ணன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டைட்டிலை விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் போலவே புரமோஷன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கனா போன்று இந்த படமும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.