கடந்த இரு நாட்களாக திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளுடன் சேர்ந்து விவசாயிகளை திட்டமிட்டு சதி செய்து கொன்ற குற்றவாளி ஒன்றிய பாஜக அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோஷம் போட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வரும் வேளையில்..
இதே காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒன்றிய பாஜக அமைச்சர்களை வரிசையாக பார்த்துக்கொண்டு அவர்கள் பெருமைகளை தொடர்ந்து கரூர் தொகுதி நலனுக்காக என்ற முகமூடி அணிந்து மகிழ்வுடன் டீவிட்டி வரும் வேளையில்..
இதே காலத்தில் அதிலும் மிக முக்கியமாக தன்னை பேச விட மறுக்கும் லோக்சபா ஸ்பீக்கர் எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வரும் வேளையில்..
இதே காலத்தில் நாக்பூர் தமிழரல்லாத கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுகவை சங்கி என குற்றம் சாட்டி செருப்பை தலையில் தூக்கி உள்ளாரே..
ராமன் பாதகையை தலையில் கொண்டு தான் பரதன் நடந்து சென்றான் என்கிறது ராமாயணம்.. நவீன காலமோ கருப்பு சிவப்பு செருப்பை சீமான் தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வைத்துள்ளது..
இதன் மூலம் நாம் அறிவது திமுக எதிர்ப்பு வெறியின் உச்சம் என்பது அது கருப்பு சிவப்பு செருப்பை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வைக்கும் அளவுக்கு இட்டு செல்லுமா என்பதை சிந்திப்பவர்கள் சிந்திக்க வேண்டும்..
ஆரிய பரதன் வகையில் மலையாளக் கரையோரத்தின் சீமான் என்று சுலபமாக இதனை கடந்து விட முடியாது.. சீமான் நிலைமையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும் ஐயோ பாவம் அவர்..
இனியும் யாக்கோபு பேரன் வேஸ்ட் அதனால் சாட்டை பின்னால் போவோம் என நாக்பூர் தமிழரல்லாத கட்சிகள் (Ntk) தலைமை நிலையம் ஆர்எஸ்எஸ் முடிவின் காரணமாக பிஎம்டபிள்யூ உயர் ரக கார் அங்கு சென்றதால்..
அன்பு மகனுக்கு சமஸ்கிருத அர்ச்சனையில் 300 கிடாவெட்டி காது குத்திய சாதனையாளரான நமக்கே ஆப்ட்ர் ஆல் 40 லட்சம் இசுசூ தான்.. நம்மைப் பார்த்து காப்பி அடித்த கப்பி பய சாட்டைக்கு 60 லட்சம் பிஎம்டபிள்யூ வா என்று சிந்தித்தால் சீமானுக்கு வெறி வரத்தானே செய்யும்..
ஆர்எஸ்எஸ் ஆல் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டவர் புலம்புகிறார் கதறுகிறார் திமுக கலர் செருப்பை தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுகிறார்.. ஐயோ பாவம் அவர்..
ஆனால் உங்களது முதலாவது கேள்வி மிகவும் குழப்பமானது ஆணாதிக்கம் நிறைந்தது.. குதர்க்கம் கொண்டது.. காரணம் ஜோதிமணியை பற்றி கவலைப்பட வேண்டியது தனது முட்டாள் தனமான பேச்சுக்களால் தற்போது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை குப்புசாமி மட்டுமே..
காரணம், அண்ணாமலையை விட புத்திசாலித்தனம் அதிகம் உள்ளதாக கருதி வரும் ஜோதிமணியின் அடுத்தக் குறி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி என்பதாகவும் இருக்கலாம்..
ஏன் ஆண்களுக்கு மட்டும் தான் திரிஷா இல்லாட்டி நயன்தாராவா.. ஏன் பெண்களுக்கு சந்திரன் இல்லாட்டி பாபு எல்லாம் கிடையாதா..
Zombieயாகி காலாவதியாகி விட்ட விட்ட சீமானை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் ஏய் ஆணாதிக்க சமூகமே மதிநுட்பம் கொண்ட பெண்மையை பற்றி என்று நீ பேசத் தொடங்குவாய் எனக் கேட்டுக் கொண்டு சோடா ப்ளீஸ்..