முதல் முறையாக முதல்வர் மு.கருணாநிதி 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டம் அறிவித்தார். ஆரம்பித்த இரண்டே மாதத்தில் எமர்ஜென்ஸி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது
பின்னர் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் அதிமுக ஆட்சியில் முதல்வர் ராமசந்திரன் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
பின்னர் 1980 நடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டே இடங்களில் வென்ற அதிமுக 38 இடங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் படுதோல்வி அடைய., மக்களிடம் நம்பிக்கை இழந்த அவரது ஆட்சி ஊழல் புகாரால் கலைக்கபட்டது.
பின்னர் வெற்றி பெற்ற அதிமுகவின் முதல்வராக ராமசந்திரன் மீண்டும் ஆக, இந்த திட்டம் தொடங்கினால் ஆட்சி கவிழும் என கேரள நம்பூதிரிகள், ஜோஸ்யர்கள் சோழிகளை உருட்ட அடுத்த எட்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடைப்பில் போடப்பட்டது திருவள்ளுவர் சிலை திட்டம்..
பின்னர் 1989 வந்தது திமுக ஆட்சி.. சோலி உருட்டலை நம்பாத திமுக ஆட்சியில், 1990-91ல் நிதிநிலையில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,
மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கணபதி தலைமையில் சிலை செதுக்கும் பணி 1990 செப்டம்பர் 6 ஆம் நாள் பணியை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் தொடங்க..
ஆரம்பித்த ஐந்தே மாதத்தில் திமுக ஆட்சி விடுதலைபுலிகள் ஆதரவு காரணமாக கலைக்கப்பட்டது. வந்தார் முதல்வராக செல்வி ஜெயலலிதா ராஜிவ் மரணம் காரணமாக..
அவரிடம் நம்பூதிரிகள் 3 முறை ஆட்சி கவிழந்த திருவள்ளுவர் சிலை வரலாறு செப்பபட, மிரண்டார் ஜெயலலிதா.. ஆக இப்போது உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரி அப்போது மீண்டும் செல்வியின் ஆட்சியில் கொறட்டை விட்டு தூங்கியது திருவள்ளுவர் சிலை திட்டம்.
1996ல் மீண்டும் திமுக ஆட்சி. மூன்றாவது முறையாக பலரும் அப்போது முதலவர் இடம் மீண்டும் 3 முறை வரலாறு சொல்லி பயமுறுத்தியதும்.. கேட்டாரா நம்பூதிரிகள் பேச்சை கலைஞர் கருணாநிதி இல்லையே..
மாறாக இந்த முறை வேகமாக முடிவெடுத்து அணையிட, 1997 இல் மீண்டும் புத்துயிர் பெற்று பணி விரைவு படுத்தப்பட்டது. சிலை அமைக்க கற்களை எடுத்து செல்ல கொச்சியிலிருந்து ‘பாண்டூன்’ என்ற படகு ஒன்று வாங்கப்பட்டது.
மொத்தம் 3,681 கற்கள் பயன்படுத்தி ஆதாரப் பீடம் அமைக்கப்பட்டது. முகம் 10 அடி உயரம், 40 அடி உயரத்தில் கழுத்து இடுப்பு பகுதிகள், 40 அடி உயரத்தில் இடுப்பு முதல் கால்பாதம் வரையும், கொண்டை பகுதி 5 அடியிலும் அமைக்கப்பட்டு திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தை எட்டியது.
மொத்தம் 6.14 கோடி செலவில் பணியாளர்கள், சிற்பிகள், உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் என 150க்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றிற்கு 16 மணி நேரம் உழைப்பில் உருவானது.
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும்., பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆக திமுக ஆட்சியில் கனவு துவங்கிய நாள் டிசம்பர் 1975.. 25 ஆண்டுகளாக காத்திருந்த திருவள்ளுவர் சிலை திட்டம்.. திமுக ஆட்சியில் முடிக்கபட்டு திறக்கப்பட்ட நாள் சனவரி 1, 2000..
இடையே வந்து போன 6 சட்டமன்ற தேர்தல்கள் வருடங்கள் 1977, 1980, 1984, 1989, 1991, 1996.. இடையிலே ஆட்சி செய்த வருடங்கள் அதிமுக 16 ஆண்டுகள்; திமுக 7 வருடங்கள்; ஆளுநர் ஆட்சி 2 வருடங்கள்..
ஆட்சி செய்த முதல்வர்கள்: திமுகவில் திரு.கருணாநிதி; அதிமுகவில் திரு.ராமசந்திரன், செல்வி.ஜெயலலிதா
இப்போது திருவள்ளுவர்க்கு டிஜிட்டலில் செவ்வாழை தோட்டத்து குரங்குகளாகி காவி பெயிண்ட அடித்து அகமகிழும் காவி கூட்டத்திடம் கேளுங்கள் கேள்வியை..
125 அடிகள் எழும்பி தலைவரை தாக்கியும் சுனாமி பேரலைகளையும் தாங்கி நின்ற திருவள்ளுவர் சிலையை பற்பல இடர்கள் வந்தாலும் உருவாக்கி கட்டியது.. கேரள நம்புதிரிகள், ஜோஸ்யர்கள் சோழிகளை உருட்ட திட்டத்தை கிடைப்பில் போட்ட அதிமுவின் முதல்வர்களா..
அல்லது 3ல் இருமுறை ஆட்சியை டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் சோழிகள் உருட்டலை நம்பாத திமுகவின் முதல்வரா..
யார் 25 வருட கனவு திட்டத்தை தமிழர்களின் வரலாற்றுச் சின்னத்தை போராடி நினைத்தை முடித்தது என்று..