கொரோனா தொற்றுக் காலத்தில் இந்திய மாணவர்களை JEE, NEET தேர்வுகளை எழுத வலியுறுத்துவது நியாயமற்றது என சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 70,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையிலும் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வை பாஜக மோடி அரசு கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் என பல்வேறு எதிர்புகளையும் மீறி, நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
மாணவர்கள் நலனில் அக்கறையின்றி செயல்படும் மோடி அரசுக்கு எதிராக, நாடு முழுவதிலுமிருந்து 11 மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
[su_image_carousel source=”media: 17083,17084″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]
ஆனால், தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு செய்வது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி தற்போதுவரை பதில் அளிக்காத நிலையில், மோடி அரசு தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்து ட்விட்டரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#PostponeNEET_JEE, #PostponeJEE_NEETinCOVID மற்றும் #modiji_postponejeeneet உள்ளிட்ட ஹாஷ்டேக்களின் கீழ் ட்விட்டரில் பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோரை டேக் செய்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன நிலையில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கிரேட்டா துன்பெர்க் JEE, NEET தேர்வுகளை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து கிரெட்டா துன்பெர்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்றுநோய் காலத்திலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்திய மாணவர்களை தேர்வு எழுத வலியுறுத்துவது நியாயமற்றது. JEE, NEET தேர்வுகளை ஒத்திவைக்க விடுக்கும் அழைப்புக்குத் துணை நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
It’s deeply unfair that students of India are asked to sit national exams during the Covid-19 pandemic and while millions have also been impacted by the extreme floods. I stand with their call to #PostponeJEE_NEETinCOVID
— Greta Thunberg (@GretaThunberg) August 25, 2020
மேலும் வாசிக்க: நீட், ஜேஇஇ தேர்வு நடத்துவதில் மாணவர்களின் மனதின் குரலை கேளுங்கள்- ராகுல் காந்தி