இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் மக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே கலந்து கொண்டனர். 1 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிரார்க்கப்பட்டது. ஆனால் 50 ஆயிரம் பேர் கூட இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அனுப்புமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டார். ஆனால் இத்தனை கட்சிகள், தலைவர்கள் வந்தும் கூட கூட்டம் குறைவாக வந்தது பாஜக கூட்டணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் உலக அளவில் ஐந்தாவது முறையாக #gobacksadistmodi ஹாஷ்டாக் உலக அளவில் தமிழர்கள் கொண்டு வந்ததை கேள்விப்பட்டு மோடி அதிர்ச்சி அடைந்ததாக பாஜக வின் உட்கட்சி தகவல்கள் கூறுகிறது
இந்த கூட்டத்தில் இந்திய நாட்டை ஆளும் தகுதியுள்ள ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் என சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் அதிமுக – பாஜக- பாமக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறினார்.
நாட்டை ஆளக்கூடிய வலிமை மற்றும் திறமை மிக்கவர் மோடி என்றார். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு விரைந்து பதிலடி கொடுத்தவர் பிரதமர் என்றும்.,
மேலும் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானியை உடனடியாக மீட்டவரும் மோடி தான் என கூறினார் முதல்வர் பழனிசாமி.
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்தவர் பிரதமர் மோடி என்றார்.
மேலும் பேசிய முதல்வர் தமிழகம் சிறந்த நிர்வாகத்திற்கான 16 விருதுகளை பெற்றுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதலாவதாக திகழ்வதாகவும் கூறினார்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க கோரினார். முன்னதாக கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என நாடே சொல்வதாக கூறினார்.