தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களான பாறைகள், மலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள், மாநில, மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரிய மரங்களில் விளம்பரங்கள் வைக்கப்படுகிறது.
 
அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றனர். மேலும் மதங்களின் சின்னங்களும் வரையப்பட்டு அதன் இயற்கை அழகு சிதைக்கப்படுகிறது.
 
எனவே, இதைதடுக்க வேண்டும் எனயானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
மேலும் இந்த விளம்பரங்கள் மூலம் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
 
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது இந்த விளம்பரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க 2 வார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.