ரஷ்யாவிடம் இருந்து சக்திவாய்ந்த அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வாங்க இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா ரஷ்யா இடையே 10 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் வாங்கப்பட்ட ஐ.என்.எக்ஸ் சக்ரா என்னும் நீர்மூழ்கி கப்பல் ஏற்கனவே இயங்கி வருகிறது. இதன் ஒப்பந்த காலம் 2022ம் ஆண்டு வரை உள்ளது. 

இந்த நிலையில், இந்திய கடற்படைக்காக மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒன்றை சுமார் 3 பில்லியன் டாலர் அதாவது 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வாங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அகுலா II கிளாஸ்(Akula II class) எனும் இந்த புதிய நீர்மூழ்கி கப்பலானது 2025ம் ஆண்டுக்குள் இந்தியா வசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது 1986ல் வடிவமைக்கப்பட்ட நீர் மூழ்கி கப்பல் ஆகும். இதை தற்போது புதிதாக தொழில் ரிதியாக நவின படுத்தி உள்ளார்கள் . 

இந்திய கடற்படைக்கு புதிய பலம் சேர்க்கும் இந்த நீர்மூழ்கி கப்பலுடன் அதில் இருக்கும் ஆயுதங்களும் இறக்குமதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 

இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல், சக்ரா III என அழைக்கப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் வாங்கினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளதும் குறிப்பிடதக்கது,

இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறும் 3வது கப்பல் இதுவாகும். ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்த எந்த தகவலை வெளியிட பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது