கர்நாடக மாநிலம் ஈஜிபுரா பகுதியில் அமைப்பதற்காக 350 டன் எடையில் 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை செய்யப்பட்டுள்ளதை நாம் அறிந்ததே..
 
அதனை லாரியில் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் சிலையை ஏற்றி சென்ற லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியில் தற்போது மண்சாலையில் சிக்கி கொண்டது.
 
இதையடுத்து சாலையை சீரமைத்து லாரியை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
முன்னதாக கோதண்டராமர் சிலை ஏற்றி வந்த லாரி, சூளகிரி அருகே ஒரு வார காலமாக நிறுத்திப்பட்டதும் குறிப்பிடதக்கது .சிலை செல்லும் வமியெங்கும் பல் வேறு இடங்களில் வீடுகள் வணிக நிறுவனங்களை இடித்ததால் அந்த பகுதியில் எல்லாம் சிறு சிறு  போரட்டமும் வெடித்தும் குறிப்பிடதக்கது.
 

கிளம்பி 7 மாதம் ஆகிய நிலையிலும் 2019 மே மாதத்தில் மணலில் சிக்கி கொண்ட காட்சி

முன்னதாக 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க 64 அடி உயரம், 26 அடி அகல பாறை திருவண்ணாமலை மாவட்டத்தில் 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.
 
முகம், 2 கைகள் மட்டும் வடிவமைக்கப்பட்ட சிலையானது, கடந்த நவ. 7-ஆம் தேதி லாரியில் கர்நாடகம் நோக்கி புறப்பட்டது.
 
கடந்த ஜன. 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டைக்கு வந்த லாரி, கிருஷ்ணகிரி வழியாக குருபரப்பள்ளி வந்தது. அங்கு மார்கண்டேயன் நதி பாலத்தில் செல்ல முடியாது என்பதால் தற்காலிக பாதை அமைக்கப்பட்டது  
 
பிறகு அந்த சிலை சாமல்பள்ளம் முனியப்பன் கோயில் அருகில் நிறுத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள பாலத்தில் செல்ல நெடுஞ்சாலைத் துறை அனுமதி அளிக்காததால், மீண்டும் தற்காலிக பாதை அமைக்கப்பட்டது.
 
ஆனாலும் சிலை அங்கிருந்து கொண்டு செல்லதில் சிக்கல்  ஏற்ப்பட்டது .
 
இதன் காரணம் சாமல்பள்ளத்துக்கு அடுத்ததாக சின்னாறு பகுதியில் பாலம் உள்ளது. அந்த பாலத்தில் லாரி செல்லக் கூடாது என நெடுஞ்சாலைத் துறையினர் கூறியுள்ளனர். எனவே, அங்கும் தற்காலிக பாதை அமைக்கும் பணி நடைபெற்று பின்னர் கோதண்டராமர் சிலையுடன் லாரி புறப்பட்டது 
 
இதனால் ஜனவர் 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் வந்த கோதண்டராமர் சிலை, ஒரு மாதமாக சாமல்பள்ளம் பகுதியிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
அப்போது அப்பகுதி பக்தர்கள்  சிலர் இது தமிழ் நாட்டிலே இருக்க வேண்டும் என்றும் , மேலும் ஆன்மீக பக்தி பெருக்கால் போராடிய சில பக்தர்களை தமிழக போலிசார் சிறையில் தள்ளியதும் குறிப்பிடதக்கது.
 
கடந்த நவம்பரில் கிளிம்பிய சிலை 7 மாதமாகி விட்ட  நிலையிலும் இனி  ஒசூரை கடந்து கர்நாடக எல்லைக்குள் சிலை செல்ல இன்னும் எவ்வளவு நாளாகும் என தெரியவில்லை என் பக்தர்கள் வருத்தமுடன் நமது சிறப்பு நிருபரிடம்  தெரிவித்தனர்..