அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து, குழந்தை இறந்த நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தையை கட்டியணைத்து தந்தை கதறி அழும் கட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணூஜில், பிரேம்சந்த் – ஆசா தேவி தம்பதியினர் அதிக காய்ச்சல் மற்றும் கழுத்து வீங்கிய நிலையில் தன் குழந்தை அனுஷ்யை, கண்ணுஜ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை தொட மருத்ததோடு, சிகிச்சையளிக்காமல் கண்ணுஜிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் கெஞ்சி கூத்தாடியும் குழந்தையை மருத்துவர்கள் தொட்டுக்கூட பார்க்கவில்லை. பின்னர் அங்கிருந்தவர்கள், இதனை படம் பிடித்ததை அடுத்து, அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
ஆனால் 30 நிமிடங்களில் அந்த குழந்தை உயிரிழந்தது. அந்த இறந்த பச்சிளம் குழந்தையை கட்டி அனைத்தபடி மருத்துவமனை வளாகத்தில் தந்தை பிரேம்சந்த் அழுதுள்ளார்.
இதுகுறித்து பிரேம்சந்த் கூறுகையில், “நாங்கள் 30 நிமிடங்களாக இந்த மருத்துவமனையிலேயே தான் இருந்தோம். ஆனால், யாரும் வந்து குழந்தையை பார்க்கவில்லை. பதிலாக கண்ணுஜிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றுதான் கூறிக்கொண்டே இருந்தனர்.
நான் ஏழை, என்னிடம் பணம் இல்லை. அதனால் தான் அரசு மருத்துவமனைக்கு வந்தேன். நாங்கள் குழந்தையுடன் அலுத்து நிற்பதை சிலர் வீடியோ எடுத்தபின்னர் தான், எங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும், குழந்தை உயிரிழந்துவிட்டது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: நீதிமன்றம் சாத்தான்குளம் காவல் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்த பின்னணி…