மத்திய அரசின் ரயில்வே, மத்திய பொறியியல் சேவைப் பிரிவு, ராணுவ தளவாட தொழிற்சாலைகள், மக்கள் கணக்கெடுப்புத் துறை, எல்லையோர சாலைப் பொறியியல் பிரிவு, ராணுவத்தின் பொறியியல் பிரிவு, தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொறியாளர் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்: 581
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.1.2019-ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ/பி.டெக் முடித்தவர்கள், Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாடு- சென்னை, மதுரை
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2018
விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UNION PUBLIC SERVICE COMMISSION) என்ற வலைத்தளத்த்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.