இந்தியாவில் மத பிரச்சினையை தூண்டி குளிர் காய்வது பாஜக மற்றும் மூன்று முறை தீவிரவாத காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் வேலையாகி போனபின்..

நீதிமன்றங்களுக்கு மத நூல்களை ஆராய்ச்சி செய்யும் அதிகாரம் யார் தந்தது. சட்டத்தின்படி தானே தீர்ப்பு எழுத வேண்டும்.. மத நூல்களை வைத்தா எழுதுவது போன்ற கேள்விகள் பொதுவெளியில் எழுவது வியப்பில்லையே..

உடை விஷயத்தில் அதுவும் பெண்கள் உடையில் கை வைத்தால் சுயமரியாதை உள்ள யார்தான் ஏற்றுக் கொள்வார்கள் என்பதனை மாண்புமிகு நீதிமன்றங்கள் அறிந்திட வேண்டாமா..

பாஞ்சாலியின் உடையில் கை வைத்த பின்னர் தானே மகாபாரதப் போர் மூண்டது.. மங்கையின் உடையில் கை வைத்தவர்கள் சொத்தும் உயிரும் அவர்களின் வாரிசுகளும் குடும்பங்களும் நிர்மூலமாக்கி போனது மறந்துவிட்டதா செவ்வாயில் தோட்டத்தில் குதித்து ஆட வந்த குரங்குகளுக்கு என்ற கேள்விகளும் இனி வருமே என்ற காரணத்தினால் மட்டுமே மார்ச் 17 அன்று கர்நாடக மாநிலத்தில் அறிவித்த பந்த வெற்றிபெற வேண்டும் என்று கூறவில்லை..

தலையில் சிறிதளவு போடும் ஹிஜாப் என்கிற துணி அப்படி என்ன மதத்தை வளர்த்து விடப்போகிறது.. மதி உள்ளவன் பெண்கள் உடையில் கை வைப்பானா.. அருள்கூர்ந்து பாஜக, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, விஹெச்பி இயக்கத்தில் இயங்கும் மானம் உள்ளவர்கள் பதில் தரட்டும்..

மத அடையாளங்கள் திருநீறு குங்குமம் ருத்ராட்ச கொட்டை பூணூல் சிலுவை டர்பன் போன்றவைகளும் இனி கர்நாடகா கல்லூரி பள்ளிகளில் கிடையாது என்று சொல்ல திராணி இருக்கிறதா நீதிமன்றத்துக்கு என்று வரும் கேள்விகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது மாண்புமிகு நீதிமன்றம்..

இந்தியாவின் பொருளாதார சூழ்நிலை வீழ்ச்சியடைந்து பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக ஆதி ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகி.. பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது..

இந்த சூழலில் ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச வர்த்தகம் சீர்குலைந்துள்ளது‌.. இந்த குழப்பமான சூழலில் அரசு எதனில் கவனம் செய்ய வேண்டும்.. பெண்களின் உடையிலா அல்லது சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தின்மீதா..

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பல பெண்கள் கர்நாடகா கல்லூரியில் தேர்வு எழுதாமல் வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு உள்ளார்கள்..

பெண்கள் கல்வியில் தடை போடுவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாங்கித் தின்று கொண்டிருக்கிறது கர்நாடக அரசு என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறது கர்நாடக நீதிமன்றங்கள்..

இந்நிலையில் நீதிமன்றங்கள் மிக சென்சிட்டிவ் விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாமா..
உடனடியாக மேல்முறையீட்டுக்கு வந்த வழக்கை எடுக்க வேண்டிய உச்ச நீதிமன்றமோ ஹோலிப் பண்டிகைக்கு பின்னர் எடுத்துக் கொள்கிறோம் என சொல்கிறது..

இப்படியா ஒரு சார்பாக தீர்ப்பு கொடுப்பது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்துக் கொண்டு உள்ளார்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகள்..
வருத்தமாக உள்ளது.. எங்கு செல்கிறது இந்தியா..

https://www.facebook.com/savenra/posts/8104035936288925