ஒன்றிய மோடி அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மக்களுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன.
அதன்படி புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், செல்போன்கள் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இன்று (செப்டம்பர் 20) கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[su_image_carousel source=”media: 26537,26538″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ, அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், சிஐடி காலணி இல்லத்தில் கனிமொழி உள்ளிட்டோரும் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சென்னையில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை வருமானம்- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி