பிரதமர் மோடியின் வங்கதேச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேச விடுதலைப் போரின் 50-வது ஆண்டு விழா மற்றும் ‘வங்கதேசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை டாக்கா சென்றடைந்தார்.
ஆனால் வங்கதேசத்துக்கு பிரதமர் மோடியை அழைத்ததற்கு வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தனர். மேலும் பிரதமர் ஹசினாவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
மோடி மத ரீதியாக பாரபட்சம் காட்டுவதாக போராடும் அமைப்புகள் விமர்சித்து, வங்கதேசத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடி வருகைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
வங்கதேசத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 26) பிரதமர் மோடி வந்ததையடுத்து, வங்கதேச தலைநகர் டாக்கா, சிட்டகாங், பிரம்மன்பாரியா உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கூட்டத்தைக் கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் குண்டு தாக்குதலும் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
[su_image_carousel source=”media: 22834,22833,22835″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
மேலும் பிரம்மன்பாரியா எனும் இடத்தில் உள்ள மதரஸாவில் படிக்கும் மாணவர்கள் நரேந்திர மோடி வருகைக்கு எதிரான பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்தினர். அப்போது பிற இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டதும் அவர்கள் கோபமடைந்து பொது இடங்களை தாக்கத் தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பிரம்மன்பாரியா ரயில் நிலையத்திற்கும் நகரின் பிற இடங்களுக்கும் தீ வைக்கத் தொடங்கினார்கள். இந்தச் சம்பவங்களின் போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அப்போது மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார். இந்தியாவின் புதிய போயிங் 777 விமானத்தில் பிரதமர் மோடி டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
வங்கதேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக அந்நாட்டு சகோதர சகோதரிகளுடன் நின்ற இந்திய ராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு இன்று நான் மரியாதை செலுத்துகிறேன். வங்கதேசத்திற்கான விடுதலைப் போரில் பல இந்திய வீரர்கள் கலந்து கொண்டதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
இந்தியாவிற்கும் வங்கதேத்திற்கும் இடையில் 50 ஆண்டுகாலமாக நட்பு உறவு தொடர்கிறது. வங்கதேசத்தின் 50 தொழில்முனைவோரை இந்தியாவுக்குச் சென்று எங்கள் ஸ்டார்ட் ஆஃப்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் சேரவும், எங்களின் சிறப்பான தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் அழைக்க விரும்புகிறேன்.
[su_image_carousel source=”media: 22838,22836″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
வங்கதேச இளைஞர்களுக்காக ஸ்வர்ணா ஜெயந்தி உதவித்தொகையை அறிவிக்கிறேன். பாகிஸ்தான் இராணுவம் இங்குள்ள மக்கள் மீது செய்த கொடுமைகளின் படங்கள் எங்களை திசை திருப்ப பயன்படுத்தின. பல நாட்களாக அந்த படங்கள் எங்களை தூங்கவிடவில்லை.
வங்கதேசத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டேன். இது எனது வாழ்க்கையின் ஆரம்பகட்ட போராட்டங்களில் ஒன்றாகும். நானும் எனது நண்பர்களும் வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டோம். அப்போது எனக்கு 20-22 வயது இருக்கும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
தேர்தல் பரப்புரைக்காக ஆதார் தகவல்களைப் பயன்படுத்திய சர்ச்சையில் பாஜக- மறுக்கும் UIDAI