கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
பால் கலப்படம் தொடர்பாக வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தொடர்ந்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது அரசு அபராதம் மட்டும்தான் விதிக்குமா.. நடவடிக்கை எடுக்காதா எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அபராதம் மட்டுமின்றி தண்டனை விதித்தால்தான் பால் கலப்படத்தை தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
 
மேலும் உணவு பாதுகாப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கை அரைகுறையாக உள்ளது என்றும் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 
இதையடுத்து விரிவான தெளிவான அறிக்கையை ஜனவரி 21ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.