பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 147 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள்: 142
பதவி: Chemist Trainee (Grade IV) – 13
தகுதி: வேதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்து சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,500 – 31,000
பதவி: Operator Trainee (Grade IV) – 12
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,500 – 31,000
பதவி: General Workman-B (Trainee) Grade I – 122
1. Chemical – 63
2. Mechanical – 32
3. Electrical – 10
4. Instrumentation – 17
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,500 – 20,000
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2018
விண்ணப்பிக்கும் முறை: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited) என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்..