கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்த காலகட்டத்தில், பாஜக மூத்த தலைவர்களுக்கு லஞ்சப் பணத்தை வழங்கி வந்துள்ளார். இந்த தலைவர்கள் பாஜகவின் மத்திய கமிட்டியில் உள்ளவர்களாகும். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி, The Caravan இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டைரியில் இதுதொடர்பாக, எடியூரப்பா கன்னடத்தில், குறிப்பு எழுதி வைத்துள்ளார். ஒவ்வொரு பக்கத்திலும் எடியூரப்பா கையெழுத்து உள்ளது. 2017ம் ஆண்டு வரை இந்த டைரி வருமான வரித்துறையினரிடம்தான் இருந்துள்ளது.
பாஜக மத்திய கமிட்டிக்கு ரூ.1000 கோடி,
அருண் ஜெட்லி மற்றும் நிதின் கட்கரிக்கு தலா ரூ.150 கோடி, ராஜ்நாத் சிங்கிற்கு ரூ.100 கோடி,
மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானிக்கு ரூ.50 கோடி
மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு ரூ.50 கோடி
மேலும் கட்கரி மகன் திருமணத்திற்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த இதழ் செய்தி தெரிவிக்கிறது.
பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா கொடுத்த லஞ்சம்
விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, அத்வானி, அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுக்கு சுமார் ரூ.1800 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இந்த தகவலை உறுதிபடுத்தி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில்
சவ்கிதார் என்று பெயரை சூட்டிக் கொண்டுள்ள பிரதமர்நரேந்திர மோடி மற்றும் இந்த டைரியில் பெயர் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும், இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும்.
லோக்பால் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.இந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.