பாஜக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜஸ்தான் அமைச்சர் சுரேந்திர கோயல், திங்கள்கிழமை விலகினார். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனியிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசில் நீர்வளத்துறை அமைச்சராக சுரேந்திர கோயல் செயல்பட்டு வந்தார்.
முன்னதாக, அம்மாநிலத்துக்கு டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சுரேந்திர கோயலுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் எற்ப்பட்ட உட்கட்சி மோதலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் இன்னும் கிடைக்கப் பெறவில்லை ..
ஆனாலும் பல்வேறு கருத்து கணிப்பும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி மோசமான தோல்வி முடியவை காணும் என்று தெரிவித்து உள்ளன..