கும்பகர்ணன் என்பவன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் தமிழர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தம்பியாகும். பிரம்மனிடம் தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது வாழ்வில் பல காலம் தூக்கத்தில் கழிந்தது. இராவணனுக்கு எதிராக செயற்படுவது தெரிந்தும், இராமன் சீதையை மீட்க இராவணனுடன் புரிந்த போரில், இராவணனுக்கு உதவினான். இப்போரில் அவன் இறந்தான்.

இதை மேற்கோள் காட்டி ., தமிழக அரசு கும்பகர்ணனை போல பல் ஆண்டு காலமாக தூங்காமல் இனியாவது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1989-இல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக அறிவித்த தமிழக அரசு, மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்களை 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது.

இதற்கு எதிரான வழக்கில் பதவி உயர்வு விதிகளை வகுக்க தமிழக நிர்வாகத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு தற்காலிக விதிகளை வகுத்தது. இந்நிலையில், மாவட்ட நூலகர்களாக இருந்து, விதிகளின் படி 2 மற்றும் 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றப்பட்ட 4 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், தீர்ப்பாயம் உத்தரவிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு விதிகள் வகுத்ததால், வழக்கு மூலம் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்.

இதனால் இனியாவது கும்பகர்ணனை போல தூங்காமல், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலிக விதிகளை வகுத்த தமிழக அரசு, மனுதாரர்களுக்கு வழக்குச் செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.