சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து, நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுக்க ஊரடங்கில் தளர்வு கொடுத்து பச்சை மற்றும் ஆரஞ்ச் சோன்களில் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
மேலும் வாசிக்க: தமிழக அரசின் டாஸ்மாக் கடை அறிவிப்பால் மக்கள் அச்சம்..
ஆனால் தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி உட்பட நீதிமன்றம் கூறிய கட்டுப்பாடுகள் ஏதும் பின்பற்றவில்லை எனக் கூறி, மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையின் முடிவில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் வாசிக்க: மதுக்கடைகள் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதா தமிழக அரசு.?
இதனால் பலவித எதிர்ப்புகள், கண்டனங்களை மீறி தமிழக அரசு மீண்டும் 284 கடைகளை நாளை திறக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 கலர்களில் அந்த டோக்கன் வழங்க மாநிலம் முழுக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.