பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் உலக அளவிலான பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த ஊழல் வழக்கில் தற்போது 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து பல்வேறு ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீப் சிக்கி இருக்கின்றார். எற்னவே பனாமா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் இருந்தன.
பொறுப்பாண்மை நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நடைபெற்று வந்தது. இதில் 2 வழக்குகளில் தற்போது அவர் மீதான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
ஒரு வழக்கு அல்-திவ்யா ஸ்ட்ரீம்மிக்ஸ் என்ற நிறுவனம் சார்ந்த ஊழல் வழக்கில் நவாப் ஷெரீப் பெயர் இடம்பெற்றிருந்தது. அது தொடர்பான வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் அளவிற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு தொடர்பான மற்றொரு ஊழல் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கியதால் பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. தற்போது அவருக்கு மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாரத பிரதமர் மோடி ,நவாஸ் ஷெரீப் வீட்டு திருமணத்துக்கு திடிர் என விஜயம செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்திய போது அதனை அவரின் ஆதரவளார்கள் “அது ஒரு வியக்கத்க்க அரசியல் சணக்கியம்” என்று மோடியை புகழ்ந்தது குறிப்பிடதக்கது.