பண்பலைத் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகருமான ஆர்ஜே.பாலாஜி இப்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, இதன் மூலம் நாட்டில் கருப்புப் பணம் ஒழியும், நாடு வல்லரசாகும் என கூக்குரல் இட்ட பிரபலங்களில் ஆர்ஜே. பாலாஜியும் ஒருவர்.
அந்த நடவடிக்கை தொடர்பாக அவர் இப்போது மன்னிப்பு கோரியுள்ளார். பெட்ரோல் ரூ 90? 2014 ல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை விடுங்கள். ஒவ்வொரு நாளும் மோசமாகிக்கொண்டேதான் போகிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, வெறுப்பு அரசியல், பயத்தை விதைத்தல், நம்பிக்கை துரோகம், கோபம் மற்றும் அடக்குமுறை என அனைத்தும் சேரும் உணர்வு அது.
பல லட்சக்கணக்கான நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களைப் போல பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டை வளப்படுத்தும் என நினைத்தேன். கட்டுப்பாடற்று மோசமாய் போன வித்தை அது. அப்போது ஆதரவளித்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜே.பாலாஜி எல்கேஜி என்ற அரசியல் நகைச்சுவை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் நாஞ்சில் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.