கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
 
ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே, நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக அண்மையில் ஆய்வுத் தகவல் வெளியானது.
 
இதனால் 7 கோடி பேர் வேலை இல்லமால் இருப்பதாகவும் மேலும் பணமபதிப்பிழப்பு செய்த மோடி நடவடிக்கையால் 1.1 கோடி பேர் வேலை வாய்ப்பையும் இழந்து வருவது நடந்தும் உள்ளது.
 
ஓலா, உபேர் டிரைவர் வேலைகளை அரசு உருவாக்கி தந்தது என்று மோடி அரசின் “நீதி ஆயோக்’ கூற்றை டிரைவர்கள் ம்றுத்த நிலையில் இதனை மேற்கொள் காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.,
இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், ஊடக செய்தி ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். அதில், ஓலா, உபேர் ஆகிய நிறுவனங்கள் மூலம் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக “நீதி ஆயோக்’ தெரிவித்த தகவல் தொடர்பாக, உபேர் ஓட்டுநர் அளித்த பதில் இடம்பெற்றுள்ளது. “அரசு எனக்கு வேலை வழங்கவில்லை. நான் லட்சக்கணக்கில் முதலீடு செய்து, வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறேன்’ என்று அந்த ஓட்டுநர் தெரிவித்ததாக ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனை சுட்டிக் காட்டியுள்ள ராகுல், “ஆணவப் போக்கு, நிர்வாக திறனின்மை ஆகிய காரணங்களால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தார்மீக அடிப்படையில் திவாலாகிவிட்டது’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 
கடன் வாங்கியும் சொந்த காசை போட்டு கார் வாங்கி ஓட்டுனராக சுயதொழில் செய்பவர்களை அரசு உருவாக்கும் வேலை வாய்ப்பாக கருதி பாஜகவினர் பேசி வருவது ஓட்டுனர்களை வேதனை அடைய செய்துள்ளதாம்  ..
 
மேலும் அவர்கள் வேலை என்பது முதலிடு இல்லாமல் படித்த படிப்புக்கு கிடைக்க வேண்டியது ..தொழில் என்பது முதலிடு செய்து உருவாக்குவது ஆனால் இங்கு பலரும் எஞ்சினியரிங் படித்து முடித்தும் வேலை இல்லாமல்  இங்கு கடன் வாங்கி கார் ஓட்டுவது எப்படி வேலை உருவாக்குது ஆகும் என்றும் அவர்கள் பாஜக அரசை நோக்கி எழுப்பி உள்ளனர்..