மேற்கு வங்க மாநிலத்தில் நிவாரணப் பொருட்களை திருடியதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தாவை, சுவேந்து அதிகாரி சுமார் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எனினும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். திரிணமூல் காங்கிஸ் சார்பில் எம்.பி.க்களாக இருந்த சுவேந்துவின் தந்தை சிசிர் குமார் அதிகாரி, தம்பி திப்யேந்து அதிகாரி ஆகியோர் திரிணமூல் கட்சியுடன் உறவை துண்டித்துக் கொண்டனர்.
இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பரில் பாஜகவில் இணைந்தார். அண்மையில் புயல் சேதங்களை பார்வையிட மேற்கு வங்கம் வந்த பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்ததால், கோபமடைந்த மம்தா பிரதமரை கூட்டத்தை புறக்கணித்தார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள மெதினிபூர் மாவட்டத்தின் உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீதும் அவருடைய சகோதரரும் முன்னாள் கந்தி நகராட்சி தலைவருமான சவுமேந்து அதிகாரி மீதும், நகராட்சி நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லட்சத்தீவு நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை தேவை; 93 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்