1991-1996 ஆம் ஆண்டுகளில் போலீஸ்க்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுத்துவிட்டு, இந்தப் பக்கம் ஊழலில் ஊரை ஏமாற்றி ஏக்கர் ஏக்கராக வாங்கிக் குவித்த #அதிமுக அரசின் செல்வி #ஜெயலலிதா அரசின் ஆவணத்தின் சாட்சியம்..
பிறக்கப்போகும் குழந்தைக்கு உன் அப்பாவின் பிணத்தை வைத்து சேர்த்த பணம் என்று சொல்வதைவிட, பணத்தை வாங்காமல் போராடி வழக்கை தோற்றேன் என்று சொல்லி வளர்த்து கொள்கிறேன் என்று டிஜிபியிடம் செங்கேணி சொல்லும் போதும்…
செங்கேணி தான் #கண்ணகி இருளாளர் போலீஸ் கஸ்டடி கொலைவழக்கு தான் #சிலப்பதிகாரம் என்று வழக்கறிஞர் சந்துரு பேசும் போதும்..
நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதியின் மௌனம் ஆபத்தானது போன்ற வாதங்களை எல்லாம் கேட்கிற வேளைகளில் உடலுக்குள் ஏற்பட்ட உணர்வுகளின் ரீங்காரம் இன்னமும் அடங்கவில்லை..
ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் குறுக்கு விசாரணையை நடத்தும் முறையைப் பற்றி பேசுவதால் மட்டும் அல்ல.. வெல்லமுடியாத வழக்கைக் கூட உண்மை என்னும் கருவை வைத்து உடைப்பது எப்படி போன்ற சட்ட நுணுக்கங்களை சொல்லுவதால் #சட்டம் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஒருமுறைக்கு மேலாக பார்க்க வேண்டிய படம் இது…
இருளாளர் சமூகத்துக்கு அப்போதைய வழக்கறிஞர் பின்னாளில் உயர் நீதிமன்ற நீதிபதியான சந்துரு செய்த காரியங்களை பார்த்தபோது அவர் மீது அளப்பரிய மரியாதை வருகிறது..
1995 களில் இருளாளர்கள் போராட்டத்தை துண்டு சீட்டு மூலம் தெருக்களில் மட்டுமல்ல., நீதிமன்ற வளாகத்திலும் முன்னெடுத்து சென்ற தோழர்கள் சிவப்பு நிற படைவீர காம்ரேட்களுக்கு தலைமுறை தாண்டிய வணக்கங்கள். . மனப்பூர்வ மரியாதைகள்..
இந்த படம் சொல்லும் பாடம் எத்தனை இடர்களை தாண்டித் தாண்டி வளர்ந்து கொண்டு வருகிறது நம் தமிழ் சமூகம் என்பதனை வரலாற்றை ஆவணப்படுத்திய தயாரிப்பாளர் Suriya Sivakumar & Jothika மற்றும் இயக்குனர் ஞானவேல் மற்றும் மொத்த படக்குழுவுக்கும் ராயல் சல்யூட் மற்றும் செம்புல பெயல் நீர் கலந்த அன்புகள்..
உண்மை சம்பவங்களை வைத்து எடுத்த திரைக்கதையில் நீதிமன்றத்தின் மூலம் நியாயத்தை பெற்று இறுதிக்காட்சியில் பாரத்தை இறக்கி வைத்தாலும்.. திரைப்படம் முடிந்தவுடன் மனதில் அலைகளாக பொங்கி வரும் பாரங்கள் இன்னும் அழுத்திக் கொண்டிருக்கின்றன..
என்று தணியும் சமூகநீதி சமத்துவத்தின் தாகம்.. இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள்.. இந்திய திரைப்பட வரிசையில் மற்றொரு மைக்கல் #ஜெய்பீம்