குட்கா விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் செந்தில்வளவன், ஓய்வுபெற்ற கலால் நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் ஆணையர் ஸ்ரீதர் ஆகியோரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. இதுவரை குட்கா வழக்கில் மாதவராவ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், குட்கா ஊழல் விவகாரம் வெளிவர அமைந்தது. இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை துவங்கியது.
பின்னர் மாதவராரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன் பின்னர் கடந்த செப்.5-ஆம் தேதி 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்நாள் டிஜிபி ., முன்னாள் மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் விடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மத்தியஅரசு அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.