முக்குலத்தோர் புலிப்படைத் கட்சி நிறுவனர் கருணாஸ் அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.
இவர் அ.தி.மு.க. குறித்தும், கூவத்தூர் பேரம் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் விமர்சனம் செய்ததால் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கருணாஸ் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த மனு சபாநாயகரின் ஆய்வில் உள்ளது. இதற்கிடையே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள கருணாஸ், சபாநாயகரை பதவி நீககம் செய்யகோரி தனது வக்கீல்கள் மூலம் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

இந்த மனு சட்டசபை கூடும்போது முதல் அஜண்டாவில் வைக்கப்படும். 35 பேர் மெஜாரிட்டி இருந்தால் விவாதம் நடைபெறும். இல்லை என்றால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரிகள் கூறிய விவரம்

” சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தனித் தீர்மானம் யார் கொண்டுவர நினைத்தாலும் எழுத்துப் பூர்வமாக 14 நாட்களுக்குள் முன்னறிவிப்புடன் சட்டசபை செயலாளருக்கும், அதன் பிரதியை சபாநாயகரிடமும் கொடுக்க வேண்டும் என்றும், இதை சட்டசபை கூடும்போது முதல்நாள் பட்டியலில் சேர்ப்போம். சட்டசபையில் இதற்கு 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தரவேண்டும் என்றும், போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றால் அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவித்தனர் . உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் 7 நாட்களுக்குள் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

அப்போது துணை சபாநாயகர் இந்த சபையை நடத்துவார்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சட்டசபையில் தி.மு.க.வுக்கு கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் கருணாசுக்கு ஆதரவு கொடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான பெரும்பான்மை ( 117 ) திமுகவிடம் இல்லாத காரணத்தினால் சபாநாயகர் நீக்க முடியாத நிலையே உள்ளது .

இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம் கேட்டதற்கு கருணாஸ் தி.மு.க.விடம் ஆதரவு கேட்டால் அந்த நேரத்தில் கட்சி மேலிடம் இதை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் வல்லுனர்கள் கருணாஸ் தினகரன் அணியுடன் சேர போகிறவர் அவருக்கு தேவை இல்லாமல் திமுக அதரவு தருவது வீண் விளம்பரம் என்று கருத்து தெரிவித்தனர்