தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அகற்றப்பட்ட நிலையில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய அரசுக்கு உள்ளது.
தைத் திங்கள் பிறக்க இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுனரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
ஜனவரி மாதம் கூடும் கூட்டத் தொடரில் புதிய சட்டத்தை நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலைப் பெற அவகாசம் இருக்காது. அதைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாரே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..
ஒவ்வொரு வார்த்தையும் வழிமொழியபட வேண்டிய #தமிழ்புத்தாண்டு கொண்டாட விரும்பும் தமிழர்களின் கருத்துககள்.. தேவை உடனடி சட்டம் அல்லது அரசாணை.. ஆவண செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் #திமுக தமிழ்நாடு அரசு முனைய வேண்டும்..
மேலும் சிந்தைக்கு சில துளிகள்:
1) தமிழ் இல்லாத 60 வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மட்டுமே முதல் மாதத்தில் அன்று பிறக்கிறது.
2) தமிழக அரசு 60 ஆண்டு முறையை பின்பற்றவில்லை ஆனால் திருவள்ளவர் ஆண்டு முறையை பின்பற்றுகிறது.
3) ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு தொடங்குவது 60 ஆண்டு முறையை பின்பற்றும் அஸ்ஸாம், வங்காளம், கேரளம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும்..
4) 1921 ல் முறையை அறிவித்த பின் திருவள்ளுவர் ஆண்டு 51 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு வருகிறது. ஆனால், புத்தாண்டு தினத்தை எடுக்க 87 ஆண்டுகள் ஏன் தாமதம் என்ற காரணமும், பின்னர் அந்த புத்தாண்டு தினத்தை முறையை மாற்றிய அடுத்த அரசின் நோக்கமும் புரியாத பெரும் புதிர்.
முதுவேனில் காலத்தில் இறுதி வரும் சித்திரை காலத்தை புத்தாண்டாக கொண்டாடாமல், பண்டைத் தமிழர் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு, தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாக தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும்.
மேல சொன்ன பிரபவ முதல் அட்சய வடமொழிப் ஆண்டுகளில் ஒரு தமிழ் பெயர்களாவது இல்லாத 60 வட மொழி பெயர் கொண்ட ஆண்டுகள் தானா தமிழர்களுக்கு.. சரி அந்த சம்ஸ்கிருத ஆண்டின் பெயராவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை.
உதாரணம், “சுக்கில” ஆண்டு = “ஆண் விந்து” ஆண்டு, “குரோதி” ஆண்டு = “பழிவாங்குபவன்” ஆண்டு, “விகாரி” ஆண்டு.= “அழகற்றவன்” ஆண்டு, “துன்மதி” ஆண்டு = “கெட்டபுத்தி” ஆண்டு.
தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து கூறிய மூன்று முடிவுகளில் பின் இரண்டை மட்டுமே எடுத்த தமிழக அரசு தமிழ் அறிஞர்கள் முதல் முடிவையும் எடுக்க வேண்டும். அதுவே தானே சரியதாக இருக்க முடியும்.