மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மாறி, மாறி வருவதால் ஆண்டுதோறும் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
இதனால், தேர்தல் செலவும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என் கூறி இதை கட்டுப்படுத்த ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை நடத்த பிரதமர் மோடி வலியுறுத்தி வந்த நிலையில்
.
இதற்காக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து விவாதிக்க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினரை கொண்டுள்ள கட்சியின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
 
இந்த கூட்டத்தில் 2022ம் ஆண்டு நாட்டின் 75 சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் 150ம் ஆண்டு விழா ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற யோசனையை முன்னிறுத்தி பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
 
ஆனால் தேர்தல் நேரத்தில் பாஜக அரசு செய்த்த EVM மற்றும் VVPAT தில்லுமுல்லு காரணமாக சுமார் 370 தொகுதிகளில் போடப்பட்ட ஓட்டுகளை காட்டிலும் எண்ணிய ஓட்டு அதிகமான காரணத்தினால் மேலும் VVPAT எண்ண மறுத்த தேர்தல் ஆணையத்தின் சதி திட்டம் காரணத்தினாலும்  இந்த கூட்டத்தை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகள் புறக்கணித்தன.
 
இந்த கூட்டத்தில் அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.
 
ஒடிசா முதல்வர் பட்நாயக்,பிகர் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, காஷ்மீர் முன்னாள் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூ.பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி , இந்திய கம்யூ.பொது செயலாளர் சுதாகர் ரெட்டியும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
 
இதனிடையே சிவசேனா உதயமானதன் 53வது ஆண்டு கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டு இருப்பதால், அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
 
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு பதிலாக அவரது மகன் கே.டி. ராமராவ் பங்கேற்கிறார்.
 
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு கட்சி சார்பில் அந்தந்த கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க செல்லவில்லை.
 
ஆனால் அதிமுக தரப்பில் அமைச்சர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுப்பப்பட்டு இருந்தார். ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற அமைச்சர் சி.வி. சண்முகத்தை பங்கேற்க விடாமல் தடுத்து மோடி அரசின் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.