வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவின விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
இதன்படி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சமும், சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.28 லட்சமும் செலவழிக்கலாம்.
 
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், உடன் வருவோருக்கு 3 வாகனங்கள்தான் அனுமதி என்பது தொடங்கி பிரசாரம் வரை பல்வேறு கட்டுப்பாடுகள், அதிரடி கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
 
அடுத்தகட்டமாக, தேர்தலில் வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
 
இதுதவிர, சிறப்பு செலவின பார்வையாளராக தமிழகத்தில் மது மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் அடுத்த கட்டமாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசார செலவின கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பிரசாரத்தில் தொண்டர்களுக்கு அளிக்கப்படும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு விலை மதிப்பீடையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
இதன்படி. அந்த வகையில், மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 208 பொருட்களுக்கான விலை மதிப்பீட்டை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது.
 
தேர்தலையும் பிரியாணியையும் பிரிக்கவே முடியாது. டாஸ்மாக் வந்ததில் இருந்து பிரியாணியும், சரக்கும் ‘காம்போ ஆபர்’ போல ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணிக்கு ரூ.180 என விலை நிர்ணயித்துள்ளது. இதன்படி கணக்கிட்டால், ஆயிரம் பேருக்கு பிரியாணி செலவே ரூ.2 லட்சம் ஆகிவிடும்.
 
இதுவே வேட்பாளரின் செலவு வரம்பில் வந்து விழுங்கிவிடும். இந்த உணவு கட்டுபாட்டை எப்படி வேட்பாளர்கள் எதிர் கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தாம் பார்க்க வேண்டும்