பாஜகவிற்கு எதிராக லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது.
23 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற உள்ளதால் அதன் கூட்டணி பலம் பெரிதாக உள்ளது ..
இந்த நிலையில் திமுக கருத்தை வழிமொழிவது போல பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது இதுகுறித்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், எங்கள் கூட்டணியில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள் எச்.டி தேவகவுடா, மாயாவதி, மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் என்று பலர் இதில் இருக்கிறார்கள். கூட்டணியை வழி நடத்த பல தலைவர்களுக்கு தகுதி இருக்கிறது.
ஆனால் எங்கள் கட்சி பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவெடுத்துவிட்டது. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடியை எதிர்க்கும் வல்லமை ராகுலுக்கு இருக்கிறது. மோடியை விட ராகுல் திறமையானவர். அவரின் வெற்றிக்காக மஜத கட்சி உழைக்கும் என்றார்
மேலும் இந்த மெகா கூட்டணியே தேர்தல் நேரத்தில் வெற்றிபெறும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.