மதராஸ் மாகாணம் மொழிவாரியாக தனது நிலத்தில் பெரும்பகுதியை இழந்த நாள் நம்பர் 1 1956..
அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்து பல மாவட்டங்கள் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் கேரளாவுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன..
திருவாங்கூர் மற்றும் மைசூர் மாகாணத்திலிருந்து சில மாவட்டங்கள் அன்றைய மதராஸ் மாகாணத்துக்கு வந்தன.. இப்படி எடுத்து மற்றும் கொடுத்தது போக கிட்டத்தட்ட தனது நில எல்லைகளை 30% அளவு இழந்தது மதராஸ் மாகாணம் நவம்பர் 1 அன்று..
1956 நம்பர் 1 ஆம் தேதிக்கு முன் பிரிப்பதற்கு முன் நிலத்தின் வடிவை பார்க்க ஏதுவாக இணைக்கப்பட்டுள்ளது மதராஸ் மாகாணத்தில் நிலத்தின் வரைபடம்..
அதற்குப் பின்னர் பல ஆண்டுகளாக மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக கழகம் எதிர்க்கட்சியாக போராடியது..
இதே காலகட்டத்தில் காமராஜ் காங்கிரஸ் அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்த சங்கரலிங்கனார், தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என சொல்லி 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து குடல் கும்பி உடல் வருந்தி இறந்தே போகிறார்..
பின்னர் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 1967 ஜூலை 18 ஆம் தேதி அன்று அண்ணாவால் தமிழ்நாடு என்று மாற்றத்தை சென்னை மாகாணம் காணுகிறது.
மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நிலத்தை இழந்த நாளை நினைவு கூறுவார்களா அல்லது அப்படி இழக்கப்பட்ட பெயரைத் தாங்கிய மதராஸ் நிலத்தின் பெயருக்கு 11 வருடம் கழித்து தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட மகிழ்வான நாளுக்கு நினைவு கூறுவார்களா..
வேடிக்கை என்னவென்றால் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 நாளில் தமிழ்நாடு நாள் என பெயர் வைக்க திமுக அரசு போட்ட ஆணையை அண்ணா பெயரில் உள்ள அதிமுக அதனை எதிர்க்கிறது..
இதனை எதிர்க்கும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வேண்டுமானால் நவம்பர் 1 அன்று மதராஸ் மாகாணம் நாள் என்று கொண்டாடிக் கொள்ளலாம்..
தமிழ்நாடு நாள் ஜூலை 18 என்பதே சரியானதாக இருக்கும். முடிவெடுத்த பின் தொடர்ந்து செயலாக்கம் என்பது கொண்ட கொள்கைகளை அண்ணாவை நினைவுறுத்தி திமுக அரசு எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள்..
தமிழ்நாடு நாள் ஜூலை 18 வாழ்த்துக்கள்… 🌺