தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர், வனத்துறை காவலர் (ஓட்டுநர் உரிமம் கட்டாயம்) பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: 1178
பதவி: வனத்துறை அதிகாரி – 300 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.35,900 – ரூ.1,13,500
பதவி: வனத்துறை காவலர் – 726 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,200 – ரூ.57,900
பதவி: ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள வனத்துறை காவலர் – 152 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,200 – ரூ.57,900
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதி: வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், பொறியியல் துறையில் (வேளாண் பொறியியல் உட்பட அனைத்து பொறியியல் பாடங்களும்), சுற்றுச்சூழல் அறிவியல், வனவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம் இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிர் உயிரியல், விலங்கியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: இணையவழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2018 @ 5 pm
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு வனத்துறை (Forest Department) என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.