தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக வேளாண்மைத் துறையில் காலியாக உள்ள உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள்: உதவி வேளாண் அதிகாரி – 580 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.20600 – 65500
தகுதி: 12-வது தேர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2018 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.100 மற்றும் ஒன்டைம் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019 FN & AN
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.