திமுக அரசு கருணாநிதி ஆட்சி காலத்தில் 1971ல் தொடங்கி பின்னர் 1974ல் முடிய சாராய விற்பனையை பின்னர் வந்த அதிமுக அரசு எம்ஜியார் காலத்தில் டாஸ்மாக் என்ற நிறுவனத்தை 1983ல் நிறுவி பின்னர் அதனை மூடாமல் தொடர்ந்து திமுக அதிமுக அரசுகள் மாறி மாறி நடத்தி வந்தது நாம் அறிந்ததே..
இந்த நிலையில் சென்ற முறை 2016 ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக் மூடுவேன் என்ற சொன்ன நிலையில் 0.4% சதவித வாக்கு வித்யாசத்தில் தோல்வியை தழுவ மீண்டும் அதிமுக ஆட்சியில் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது ..
சமீபத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானம் குடிக்கும் போராட்டத்தில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடையில் பெண்கள் மதுபாட்டில்களை வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது .
அச்சமயம் தாலியில் மதுபான பாட்டில்களை கட்டி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு ஆண்களைப் போல தங்களுக்கும் குடிக்கும் உரிமை உண்டு என பெண்கள் முழக்கமிட்டதும் குறிப்பிடதக்கது..
சென்னையில் சில இடங்களிம் பெண்கள் சர்க்கு வாங்கி செல்வதை காணும் நிலையில் ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூர் கிராமத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் தினமும் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் குடிக்க வருவதாக கூறப்படுகிறது.
தினமும் கூலி வேலைக்கு செல்லும் இவர்கள், வேலைபளு மற்றும் உடல் சோர்வு காரணமாக இவ்வாறு மது அருந்துவதாக தெரிவிக்கின்றனர். ஆண்கள் குடிக்கும் போது நாங்களும் ஏன் குடிக்க கூடாது என கேள்வியும் எழுப்பி வருவதும் குறிப்பிடதக்கது ..