சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வீடு, அலுவலகத்திலிருந்து கோடிக் கணக்கான பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, ஆவணங்கள் உள்ளிட்டவைகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து,
பாண்டியன் பணிபுரியும் பனகல் மாளிகை சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. சோதனையில், கணக்கில் வராத தொகை 88,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது.
அங்கிருந்து கைப்பற்றப்பட்ட வங்கியின் கணக்குப் புத்தகத்தில் 38,66,220 ரூபாய் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அவரது வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
பாண்டியன் வீட்டிலிருந்து ரொக்கமாக 1.37 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி, 5.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10.52 காரட் வைரம்,
7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்துகளுக்கான பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதியில் 37 லட்ச ரூபாய், ஒரு எடியோஸ் கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதனைக் கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வலதுசாரி அமைப்புகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்- வால் ஸ்ட்ரீட் பகீர் குற்றச்சாட்டு