தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் காலியாக உள்ள மூத்த, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்:
மூத்த தொழில்நுட்ப உதவியாளர்(Senior Technical Assistant) – 05
சம்பளம்: மாதம் ரூ.36,400 – 1,15,700
தகுதி: டிப்ளமோ டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, பிஎஸ்சி டெக்ஸ்டைல் ​​அண்ட் ஃபேஷன் டெக்னாலஜி.

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant) – 14
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
தகுதி: கைத்தறி தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பத்தில் டிப்ளமோ.

வயது வரம்பு: 01.07.2019 தேதிப்படி அதிக பட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.150 மற்றும் ஒன்டைம் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.04.2019 FN & AN

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…