தமிழக அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: தொல்லியல் துறை நூலகர் (Librarian in Archaeology Department) – 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 – 58,600
தகுதி: குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2018
தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019 – FN & AN
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…